சேலம்,
வேளாண் கூட்டுறவு சங்கத்தில் குவின்டால் விரலி ரக மஞ்சள், 25,899 ரூபாய்க்கு விற்பனையாகி, புது உச்சத்தை தொட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார் வேளாண் கூட் டுறவு சங்கத்தில், மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார பகுதி விவசாயிகள்,732 மூட்டைகள் கொண்ட, 430 குவின்டால் மஞ்சளை கொண்டு வந்தனர். தரத்துக்கு ஏற்ப, வியாபாரிகள் விலையை நிர்ணயித்தனர்.
குவின்டால் விரலி ரகம், 18,689 முதல் 25,899 ரூபாய் ; உருண்டை ரகம், 17,069 5 22,402 ரூபாய்; பனங்காளி (தாய் மஞ்சள்), 25,589 முதல் 33,659 ரூபாய் வரை விலைபோகின. கடந்த செப்டம்ப ரில் குவின்டால் விரலி ரகம், 18,399 ரூபாய் ; உருண்டை ரகம், 16,639 ரூபாய் ; பனங்காளி, 33,555 ரூபாய் வரை விலை இருந்தது. அக்., 15ல், விரலி ரகம், 23,899 ரூபாய் ; உருண்டை ரகம், 19,726 ரூபாய் என விலை உயர்ந்தது.
தொடர்ந்து இரு வாரங்களில், குவின்டாலுக்கு விரலி ரகம், 2,000 ரூபாய், உருண்டை ரகம், 2,676 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. மஞ்சள் வரத்து குறைந்ததால் அதன் விலை புது உச்சத்துக்கு சென்றுள்ளது என, விவசாயிகள் தெரிவித்தனர்.