சென்னை,
தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி பணம் திருட்டு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி ரூபாய், அப்பாவி மக்களின் வங்கி கணக்குகளில் இருந்து, டிஜிட்டல் மோசடி செய்யப்பட்டு வருகிறது. இதில், இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், டிஜிட்டல் மோசடி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில், மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், இதுநாள் வரை முதியவர்கள், தனியார் நிறுவனங்கள், அப்பாவி மக்களை மட்டுமே குறி வைத்து நடந்து வந்த டிஜிட்டல் மோசடி, சில தினங்களாக அரசு துறைகளுக்குள்ளும் ஊடுருவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நைஜீரிய மோசடி கும்பல், தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வரும், ஊராட்சி ஒன்றியங்களின் வங்கி கணக்கில் இருந்து நிதியை, டிஜிட்டல் மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஊரக வளர்ச்சித்துறையின் அரசு நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகளில் ஊடுருவி, மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து மட்டும், 22.10 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து இந்த டிஜிட்டல் மோசடி நடந்திருக்கலாம் என, முதல்கட்ட சைபர் கிரைம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், தமிழ்நாடு அரசு வங்கிக் கணக்குகளில் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5 கோடி திருடப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி, தாம்பரம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.14 கோடி, திருப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அரசு நிதி பரிவர்த்தனைகளுக்கான வங்கி கணக்குகள் ஊடுருவப்பட்டு, இவ்வளவு பெரிய தொகை திருடப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நைஜீரியாவிலிருந்து இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டதா, பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டது, மோசடி செய்யப்பட்ட தொகையை மீட்க முடியுமா என்பது குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது. அரசு நிதிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை வருகிறதா? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.