தமிழக செய்திகள்

பட்ஜெட்டில் அறிவித்த பிறகே பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் - அமைச்சர் நிர்மல்குமார்

1.31 கோடி பெண்கள் வங்கி கணக்கில் மகளிர் உதவித்தொகை ரூ.1,000 நேற்று வரவு வைக்கப்பட்டது.

சென்னை,

முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

தேர்தலுக்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை விஜய் கொடுத்து இருந்தார். அந்த வாக்குறுதி களை நிறைவேற்ற தனக்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் நிதிநிலை பற்றி தெரிந்து கொண்டு செய்வேன் என்று பதவி ஏற்பு தினத்தில் அவர் கூறினார்.

இதையடுத்து மாதந்தோறும் 15-ந்தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உதவித்தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் அதிகரித்தது. ஏனெனில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி அளிக்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே மே மாதத்துக்கான கலைஞர் மகளிர் உரிமை பயனாளிகள் வங்கி கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும்' என்று தெரிவித்தார். அதன்படி 1.31 கோடி பெண்கள் வங்கி கணக்கில் நேற்று காலை ரூ.1,000 கலைஞர் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டது.

இந்தநிலையில், அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தவெக எந்த வெர்ஷனும் கிடையாது புது வெர்ஷன். நிதி ஆதாரங்களை சரி செய்த பிறகே திட்டம் செயல்படுத்தப்படும். பட்ஜெட்டில் அறிவித்த பிறகே பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும்.

2,3, மாதங்களில் எல்லாம் சரி செய்யப்பட்டு சீராக செயல்படும். ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்து அதற்கான அதிகாரிகளை நியமித்து வருகிறார் முதல்-அமைச்சர் விஜய்.

தேவைப்படும் நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதில் முதல்-அமைச்சர் விஜய்க்கு எந்தத் தயக்கமும் இல்லை.

என்றார்.