தமிழக செய்திகள்

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு!

ஜனார்த்தனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

சென்னை,

விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கபடும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்,

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை மோட்டார் வாகனப் பிரிவைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் ஜனார்த்தனன் (வயது 29), த/பெ.முருகப்பா, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா பாதுகாப்புப் பணிக்கு ஓட்டுநர் பணியில் காவல் ஆய்வாளரின் பொலிரோ வாகனத்தை ஓட்டிச்சென்று, பணி முடித்து, கடந்த 31-ந் தேதி அன்று அதிகாலை நாகப்பட்டினத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருகண்ணங்குடி ஆர்ச் அருகே, அவர் ஓட்டி வந்த வாகனத்தின்மீது, எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்திற்குள்ளானதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

ரூ.40 லட்சம் நிதியுதவி

இரண்டாம் நிலைக் காவலர் ஜனார்த்தனின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

ஜனார்த்தனனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு நாற்பது லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT