சென்னை,
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவதற்கு ரூ.400 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 26-ந்தேதி அன்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர், வருகிற 6-ந்தேதி வரையில் நீதிமன்ற காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் முன் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான தீர்ப்பை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு 2-ந்தேதிக்கு (நாளை) ஒத்தி வைத்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பி ரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அதில் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இந்த நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வங்கி கணக்கு விவரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.