தமிழக செய்திகள்

சென்னை கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.46 கோடி அபராதம் வசூல்

ரெயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் உரிய டிக்கெட் அல்லது பயண அனுமதிச் சீட்டுடன் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்

சென்னை,

சென்னை கோட்டத்தில் ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.46.09 கோடி அபராதம் வசூலிக் கப்பட்டுள்ளது.

டிக்கெட் எடுக்காமல் பயணம்

தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற் றும் சிறப்பு ரெயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களை பிடிக்க ரெயில்வே நிர்வாகம் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வருகிறது.

உரிய டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகளின் நலனை பாதுகாக்கவும், பாதுகாப்பான மற்றும் சவுகரியமான பய ணத்தை உறுதி செய்யவும் இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அபராதம் வசூல்

அதன்படி, நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் (கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரை) சென்னை ரெயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் டிக்கெட் இல்லாமலும், முறைகேடாகவும் பயணம் செய்த 6 லட்சத்து 56 ஆயிரத்து 661 பேர் பிடிபட்டனர். அவர்க ளிடம் இருந்து அபராதமாக மொத்தம் ரூ.46 கோடியே 9 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட ரூ.36 கோடியே 82 லட்சத்தை விட ரூ.9 கோடியே 27 லட்சம் (25.18 சதவீதம்) அதிகமாகும்.

வேண்டுகோள்

ரெயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் உரிய டிக்கெட் அல்லது பயண அனுமதிச் சீட்டுடன் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். டிக்கெட் பரிசோதகர்கள் கேட்கும்போது அதனை காண்பிக்க வேண்டும் என சென்னை ரெயில்வே கோட்டம் அறிவுறுத்தியுள்ளது.

அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணச் சூழலை உருவாக்க ரெயில்வே விதிகளைப் பின்பற்றி ஒத் துழைப்பு வழங்குமாறு பயணிகளுக்கு சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT