தமிழக செய்திகள்

திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் - எடப்பாடி பழனிசாமி

போதை ஆசாமிகளால் காவல்துறைக்கே பாதுகாப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பட்டாசு தொழிலை பாதுகாக்க நீதிமன்றத்தில் வாதாடி போராடியது அதிமுக. பட்டாசு தொழிலுக்கு நெருக்கடி வந்தபோது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி நடவடிக்கை எடுத்தார். 20 எம்.பிக்களுடன் மத்திய மந்திரிடம் பட்டாசு தொழில் நெருக்கடி குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும், திமுகவுக்கு அதுபற்றி கவலை இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு நிரந்த டிஜிபியை நியமிக்க முடியாத அரசாங்கமாக இது உள்ளது.

தமிழகத்தில் இருந்து போதைப்பொருள் முற்றிலுமாக அகற்றப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 3 மாதங்களில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிப்போம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இப்போதைய அமைச்சர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

டாஸ்மாக்கில் ஊழல், பல துறைகளில் ஊழல், ஊழல் நிறைந்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கடன் வாங்க திமுக கவலைப்படுவதில்லை, திமுக ஆட்சியில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் போன பிறகு, ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன என கடன் வாங்கிவிட்டார். திமுக அரசால் மக்களின் தலையில் சுமத்தப்பட்ட கடன் இந்த 6 லட்சம் கோடி ரூபாய். காவிரி குண்டாறு இணைப்புத்திட்டத்தை

திமுக அரசு முடக்கியது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.