தமிழக செய்திகள்

ரசாயனம் கலந்த மாம்பழங்களை விற்றால் ரூ.5 ஆயிரம் அபராதம்: தமிழக அரசு எச்சரிக்கை

ரசாயன முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாம்பழ சீசன் மார்ச் இறுதியில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் இறுதியில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், வரத்து குறைவாக இருப்பதால் விலை சற்று அதிகமாக உள்ளது. சந்தைகளில் மாம்பழம் விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், கடை உரிமையாளர்களுக்கு தமிழக உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ரசாயனம் மூலம் செயற்கையாக மாம்பழங்களைப் பழுக்க வைத்து விற்பனை செய்யும் கடை உரிமையாளருக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அதிக லாபத்திற்காக செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் மாம்பழங்கள் மொத்த மற்றும் சில்லரை விற்பனைக்கடைகளில் ரசாயன முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT