தமிழக செய்திகள்

பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா பறிமுதல்

போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

ராமேசுவரம்,

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.80 லட்சம் கஞ்சா மூடைகளை போலீசார் கைப்பற்றினர்.

கஞ்சா மூடைகள்

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக அவ்வப்போது கடத்தல்கள் நடைபெறுகின்றன. இந்தநிலையில் ராமேசுவரம் அருகே பாம்பன் வடக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கியூ பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் சிலர் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கடற்கரை பகுதிக்கு சென்று சோதனையிட்டனர். 4 சாக்கு மூடைகள் கிடந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது மொத்தம் 20 பார்சல்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.

ரூ.80 லட்சம்

இந்த மூடைகளை படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக பாம்பன் கடற்கரைக்கு கொண்டு வந்ததும், போலீசாரை பார்த்ததும் மூடைகளை போட்டு விட்டு கடத்தல்காரர்கள் ஓடியதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.80 லட் சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கடத்தல்காரர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT