கோவை,
கோவையில் ரூ.3 கோடி தங்கம் மோசடி தொடர்பாக மதுரையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை ராஜவீதி அசோக்நகரை சேர்ந்த ஆனந்தன் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு மதுரையில் நகைக்கடை நடத்தி வரும் சுதர்சன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்க நகைகளைக் கொடுத்தால் 20 நாட்களில் விற்று பணமாகத் தருவதாக சுதர்சன் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை ஆனந்தன் அவரிடம் வழங்கியுள்ளார்.
ஆனால் அதற்குரிய பணத்தைக் கொடுக்காமல் சுதர்சன் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில், கோவை நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதர்சனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.