கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பைக் மோதி பலியான தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.34.26 லட்சம் இழப்பீடு - சென்னை கோர்ட்டு தீர்ப்பு

சாலையில் நின்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த பைக் தொழிலாளி மீது மோதியது.

சென்னை,

காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் குமார் (40 வயது). இவர் முடிதிருத்தும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி இளவந்தாங்கல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் இழப்பீடு கோரி அவரது மனைவி கவிதா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, விபத்தில் பலியான குமாரின் குடும்பத்தினருக்கு தேசியமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனம் ரூ.34 லட்சத்து 26 ஆயிரம் இழப்பீடு வழங்க தீர்ப்பளித்தார்.

SCROLL FOR NEXT