தமிழக செய்திகள்

மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம்: போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்

மயிலாடுதுறையில் மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடை உரிமையாளரை ஜாமீனில் விடுவிக்க, போலீஸ் ஏட்டு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

மளிகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலீஸ் ஏட்டு

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், கடை உரிமையாளரை ஜாமீனில் விடுவிக்க இடைத்தரகர் மூலம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு போலீஸ் ஏட்டு அன்பரசன்(45) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணியிடை நீக்கம்

புகையிலை பொருட்கள் பறிமுதல் குறித்து கடை உரிமையாளர், வக்கீல் சங்கமித்திரனிடம் தெரிவித்தபோது லஞ்சம் கைமாறியது தெரியவந்தது. இதுகுறித்து முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மற்றும் எஸ்.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, எஸ்.பி. சினேகாபிரியா, ஏட்டு அன்பரசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT