தமிழக செய்திகள்

‘ஆட்சியாளர்கள் பெருமை பேசுவதை தவிர்த்து வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்’ - உதயநிதி ஸ்டாலின்

போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டையும், பரிசுத்தொகையையும் அதிகப்படுத்த வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாட்டில் விளையாட்டை மாபெரும் மக்கள் இயக்கமாக்கிட வேண்டும் என்று ‘முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை’ தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தோம்.

Untapped Sports Talents-ஐ கண்டறியும் விதமாக நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளின் மூலமாக, எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் - வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டனர்.

நம் திராவிட மாடல் ஆட்சியிட்ட அடித்தளத்தில் இந்தாண்டு நடத்தப்பட்டுள்ள இப்போட்டிகளில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும் - பங்கேற்றோருக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Water Sports வீரர்களை உருவாக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையில், நம் திராவிட மாடல் ஆட்சியில் ரூ.42.90 கோடி மதிப்பில் Olympic Water Sports Academy அமைப்பதற்காக கடந்தாண்டு ஜனவரி மாதமும், சேலத்தில் ரூ.20 கோடி மதிப்பில் Multilevel Sports Complex அமைப்பதற்காக 2024-லும் நம் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம்.

அந்த இரண்டு திட்டங்களுக்குமான பெரும்பாலான பணிகள் நம் திராவிட மாடல் ஆட்சிக்காலத்திலேயே நிறைவுற்ற நிலையில், அந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை இன்றைய முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார்.

குறிப்பாக, சேலம் Multi-level sports Complex-ல் ரூ.11.40 கோடி மதிப்பில் புதிய Synthetic Athletic Track அமைக்கவும் கடந்த டிசம்பர் மாதம் நம் தலைவர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

இப்படி நம் திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுக்கென்று நாம் கொண்டு வந்த உள்கட்டமைப்புத் திட்டப்பணிகளை இந்த ஆட்சியாளர்கள் முறையாக செய்து முடித்தாலே, அடுத்து வரும் ஆண்டுகள் முழுவதும் அவற்றை திறந்து வைத்துக் கொண்டிருக்கலாம்.

நம் திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட Global Sports City திட்டத்தை ரத்து செய்த இந்த ஆட்சியாளர்கள், Olympic City அமைக்கப் போவதாக சொன்னார்கள். அதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் என்ன? அந்தத் திட்டத்தின் நிலை என்ன?

வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த பிப்ரவரி மாதம், 3% Sports Quota-வின் கீழ், நம் திராவிட மாடல் அரசு சார்பில் நம் தலைவர் அவர்கள் ஒரே நாளில் 178 வீரர் - வீராங்கனையருக்கு அரசு வேலைவாய்ப்பை வழங்கினார்கள். 3% இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக 300 வீரர்களுக்கு அரசுப்பணிகள் வழங்கிய அரசு, நம் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு. எனவே, இப்பணியில் சுணக்கம் காட்டாமல் இந்த அரசு தொடர்ந்திட வேண்டும்.

முக்கியமாக, முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டை முதல்முறையாக ஏதோ இந்த மூடர் கூட்ட ஆட்சியில் தான் அதிகபட்சமாக ரூ.83 கோடி என ஒதுக்கியது போல் மீண்டும் ஒரு பொய்யை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், கடந்தாண்டே நம் திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய தலைவர் அவர்கள், ரூ.83.37 கோடி ரூபாயை CM Trophy Games-க்காக ஒதுக்கி இருந்தார்கள்.

எனவே, இந்த சர்க்கஸ் கூட்ட ஆட்சியாளர்கள், பொய்பேசி பெருமைத் தேடுவதை தவிர்த்து, வரும் காலங்களில், போட்டிக்கான நிதி ஒதுக்கீட்டையும் - பரிசுத்தொகையையும் அதிகப்படுத்தி நம் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT