தமிழக செய்திகள்

கோவாவில் இருந்து ராமேசுவரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ரஷிய பெண்கள்

வாடகை மோட்டார் சைக்கிளில் பயணமாக ரஷிய பெண்கள்புறப்பட்டனர்.

ராமேசுவரம்,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ராமேசுவரம், தனுஷ்கோடிக்கு தினமும் ஏரா ளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்த நிலையில் ரஷிய நாட்டை சேர்ந்த மனிஷா (வயது 52), தியானா (50) ஆகிய 2 பெண்கள் விமானம் மூலம் கோவா வந்தனர். அங்கிருந்து வாடகை மோட்டார் சைக்கிளில் பயணமாக புறப்பட்டனர்.

கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றி பார்த்தபடி தமிழகம் வந்தனர். நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சென்று கடல்நடுவே உள்ள ரோடு பாலத்தில் நின்று வீடியோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் படம் எடுத்துக்கொண்டனர்.

இதுகுறித்து ரஷிய பெண்கள் கூறும்போது, “தற்போது ராமேசு வரம் வந்துள்ளோம். தனுஷ்கோடி வரை சென்றுவிட்டு மீண் டும் கோவா செல்ல திட்டமிட்டு உள்ளோம். ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் தூரம் வரை மோட்டார்சைக்கிளில் பயணிக்கிறோம். இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல் உணவுகளை சாப்பிட்டோம். இந்திய உணவுகள் ருசியாகவும், காரமாகவும் உள்ளன. கோவாவில் இருந்து வரும் வழியில் பல இடங்களில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிக்க சிரமமாக உள்ளது. இந்திய மக்களின் வாழ்க்கை, கலாசாரம் பிடித்திருக்கிறது" என்றனர்.

SCROLL FOR NEXT