தமிழக செய்திகள்

சபரிமலை சீசன்: சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சென்னை சென்டிரல்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

திருப்பூர்,

சபரிமலை சீசனை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு. சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சென்னை சென்டிரல்-கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை சென்டிரல்-கொல்லம்

அதன்படி, சென்னை சென்டிரல்-கொல்லம் (வண்டி எண்.06119) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 18-ந்தேதி முதல் ஜனவரி 20-ந்தேதி வரை (10 சேவைகள்) புதன் கிழமைகளில் சென்னை சென்டிரலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த ரெயில் ஈரோட்டுக்கு புதன்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு வந்து 9.25 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு இரவு 10.03 மணிக்கு வந்து 10.05 மணிக்கு புறப்படும்.

கொல்லம்-சென்னை சென்டிரல்

கொல்லம்-சென்னை சென்டிரல் (06120) வாராந்திர சிறப்பு ரெயில், வருகிற 19-ந்தேதி முதல் ஜனவரி 21-ந்தேதி வரை (10 சேவைகள்) வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு வியாழக்கிழமைகளில் இரவு 7.18 மணிக்கு வந்து 7.20 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு 8.20 மணிக்கு வந்து 8.30 மணிக்கு புறப்படும். மேற்கண்ட தகவலை, ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT