சிறப்பு ரெயில்கள் 
தமிழக செய்திகள்

சபரிமலை ஸ்பெஷல்: சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள்

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (நவ.7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - கொல்லம்

சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 20-ந் தேதி முதல் ஜனவரி 22-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06118) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

சென்னை - கொல்லம்

இதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 21-ந் தேதி முதல் ஜனவரி 23-ந் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06121) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் கொல்லத்தில் இருந்து நவம்பர் 22-ந் தேதி முதல் ஜனவரி 24-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06122) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

சென்னை சென்டிரல் - கொல்லம்

மேலும், சென்னை சென்டிரலில் இருந்து நவம்பர் 18-ந் தேதி முதல் ஜனவரி 20-ந் தேதி வரை புதன்கிழமைகளில் மதியம் 3.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 19-ந் தேதி முதல் ஜனவரி 21-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06120) மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது. 18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது.

முன்பதிவு நாளை தொடக்கம்

சென்னை சென்டிரலில் இருந்து நவம்பர் 16-ந் தேதி முதல் ஜனவரி 25-ந் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து நவம்பர் 17-ந் தேதி முதல் ஜனவரி 26-ந் தேதி வரை செவ்வாய்கிழமைகளில் மாலை 6.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06084) மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

24 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (நவ.7) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT