சென்னை,
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் இலக்கிய நிலத்தில் சாமானிய மக்களின் வாழ்வை எழுத்தாக விதைக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாசிச ஆரிய எண்ணங்களுக்கு எதிராக எழுதும் எழுத்தாளருக்கு விருது வழங்குவதுதான் பொருத்தம். தாமதமானாலும் அது தற்போது நடந்துள்ளதில் மகிழ்ச்சி.
தோழரின் எழுத்துப் பயணம் சிறப்புடன் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.