தமிழக செய்திகள்

சேலம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்- அண்ணாமலை

சேலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சேலம் அருகே அரியானூரில், அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.