தமிழக செய்திகள்

சேலம்: ஓடும் பஸ்சில் சிறுமி அணிந்திருந்த தங்க சங்கிலி மாயம்

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பரணிதரன். இவர் சம்பவத்தன்று தனது மனைவி மற்றும் பெண் குழுந்தையுடன் பஸ்சில் சேலம் வந்து புதிய பஸ் நிலையத்தில் இறங்கினார்.

அப்போது சிறுமி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.