தமிழக செய்திகள்

சேலம்: கரியக்கோயில் அணையில் இருந்து பழைய, புதிய பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை

புதிய பாசன பகுதிகளுக்கு 21.03.2026 அன்று முதல் 30 கனஅடி/வினாடி வீதம் நாளொன்றுக்கு 2.592 மில்லியன் கன அடி வீதம் 14 நாட்களுக்கு 35.528 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

சேலம்

புதிய பாசன பகுதிகளுக்கு 21.03.2026 அன்று முதல் 30 கனஅடி/வினாடி வீதம் நாளொன்றுக்கு 2.592 மில்லியன் கன அடி வீதம் 14 நாட்களுக்கு 35.528 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழக நீர்வளத்துறையின் அரசு செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தியில், சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கரியக்கோயில் நீர்த்தேக்கத்திலிருந்து, அணையின் பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காகவும், கிணறு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், பழைய பாசன பகுதிகளுக்கு 06.03.2026 அன்று காலை 8 மணி முதல் அணையின் பிரதான கால்வாய் மதகுகளின் ஆற்று வெளிப்போக்கி (River Outlet) வழியாக 40 கனஅடி/வினாடி என நாளொன்றுக்கு 3.456 மில்லியன் கன அடி வீதம் 15 நாட்களுக்கு 53.292 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

புதிய பாசன பகுதிகளுக்கு 21.03.2026 அன்று காலை 8 மணி முதல் அணையின் வலது புற கால்வாயின் மூலம் 15 கனஅடி/வினாடி மற்றும் இடது புற கால்வாயின் மூலம் 15 கனஅடி/வினாடி என மொத்தம் 30 கனஅடி/வினாடி வீதம் நாளொன்றுக்கு 2.592 மில்லியன் கன அடி வீதம் 14 நாட்களுக்கு 35.528 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், சிறப்பு நனைப்பாக (Special Wetting) தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.