சேலம்,
ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தின் வடக்கே சுமார் 3 கிலோமீட் டர் தூரத்தில் பிரபல சுற்றுலாத்தலமான முட்டல் ஏரி உள்ளது. இந்த ஏரி யில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி இருந்து வந் தது. இந்த ஏரியில் படகு சவாரி செய்ய பெரியவர்களுக்கு ரூ.50-ம், சிறிய வர்களுக்கு ரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் கடும் வறட்சி காரணமாக ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்து விட்டது. இதனால் இந்த ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் முட்டல் ஏரியில் இருந்து வடக்கு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து இல் லாததால் வெறும் பாறையாக காட்சி அளிக்கிறது. இதனால் முட்டல் ஏரி. ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அதே நேரத்தில் முட் டல் ஏரி அருகே வண்ண, வண்ண மலர்கள் உள்ள பூங்காவிற்கு செல்ல அனுமதி உண்டு என வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.