சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் மேச்சேரி சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் வருகிற 8-ந் தேதி முதல் பணிகள் நிறைவடையும் வரை ஓமலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓமலூர், மேச்சேரி, பென்னாகரம் வழியாக பெரும்பாலை சாலை அனைத்து வகையான போக்குவரத்திற்கும் மூடப்படுகிறது.
வாகன ஓட்டிகள் ஓமலூர்-சங்ககிரி சாலையில் இருந்து அம்மன் கோவில்பட்டி, ரெட்டிப்பட்டி வழியாக அமரகுந்தி செல்லும் சாலை, எம்.செட்டிப்பட்டி-பாலிக்கடை சாலை வழியாக மாநில நெடுஞ்சாலையை அடைந்து மேச்சேரி நோக்கி செல்ல வேண்டும். அதேபோல், மேச்சேரியில் இருந்து ஓமலூர் நோக்கி செல்லும் வாகனங்கள், எம்.செட்டிப்பட்டி-பாலிக்கடை சாலை மற்றும் காமலாபுரம்-சின்னதிருப்பதி-ஜோடுகுளி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலையை அடைந்து ஓமலூர் நோக்கி செல்ல வேண்டும்.
எனவே பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்தி போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு எடப் பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.