தமிழக செய்திகள்

சேலம்: அரசு பள்ளியில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமனமா? - தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்

ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

சென்னை,

சேலம் அரசு மாதிரிப் பள்ளியில் ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பரவும் தவறான தகவல் குறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் நம்பகத்தன்மை பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பரவும் செய்தி

சேலம் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் (Model School) ஆங்கிலம் தெரியாத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், "சேலம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியின் (Model School) JEE & NEET மண்டல பயிற்சி மையத்தில், NIT மற்றும் IIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கில மொழியில் பயின்ற மற்றும் JEE உள்ளிட்ட போட்டித் தேர்வு பயிற்சியில் அனுபவம் உள்ளவர்கள் மூலம் தலைமையாசிரியர் தலைமையில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சந்தேகங்களை விளக்க அரசுப் பள்ளி ஆசிரியர்களும் உள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான தகவலைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.