சேலம்,
ஓமலூர் பஸ் நிலையத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓமலூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக ஒரு பெண் பயணி தனது தாயாரு டன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் கிண்டல் செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் வாலிபர்கள் குடி போதையில் இருந்த அந்த நபரை சரமாரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஓமலூர் போலீசாரிடம் மதுபோதையில் சில்மிஷம் செய்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதைய டுத்து மதுபோதையில் இருந்த அந்த நபரை சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர்.
பட்டப்பகலில் தாயாருடன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்கு காத்து நின்ற பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் ஓமலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.