தமிழக செய்திகள்

சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்துடன் நிறுத்தம்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன.

சேலம்,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைமேம்பால தூண்கள் அமைத்தல், இரும்பு கர்டர்களை பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22154) சேலம் சந்திப்பில் இருந்து வருகிற 24-ந்தேதி வரை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு செல்லாமல், தாம்பரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.

இந்த ரெயில் சேலம் சந் திப்பில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஆத்தூர், சின்னசேலம், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக தாம்பரம் ரெயில் நிலையத்தை அதி காலை 3.30 மணிக்கு சென்றடையும். இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.