சென்னை,
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட் டது. உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் இதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகளில் தீபம் ஏற்றினர். இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் பட்டாசுகளும் கொளுத்தப்படுகின்றன.
அந்த வகையில் இந்தியாவில் எல்லா இடங்களிலும் மக்கள் பட்டாசுகள் வெடித்தனர். குறிப்பாக பெருநகரங்களில் மிகமிக அதிக அளவில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
காற்று மாசை கருத்தில் கொண்டு பசுமைப் பட்டாசுகளை கொளுத்த வேண்டும் என்றும், அதுவும் காலையிலும், மாலையிலும் தலா ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என்று நிபந்தனை இருந்தாலும், அதை யாரும் கருத்தில் கொள்ள வில்லை. நேற்று பகலிலும் இரவிலும் அதிக அளவில் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.
இந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் தான் பட்டாசு தொழில்கள் அதிகம் உள்ளன.
இங்கு விருதுநகர், சிவகாசி, சாத்தூர், வெம்பக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் உள்ளன. 4,000 மேற்பட்டபட்டாசுகடைகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு மூலப் பொருட்களின் விலை உயர்வால் சுமார் 30 சதவீத அளவுக்கு உற்பத்தி குறைந்தது. இருந்தாலும் விலை சற்று அதிகமாக இருந்தது. இதன் காரணமாக கடந்த ஆண் டைப்போலவே இந்த ஆண் டும் ரூ.7 ஆயிரம் கோடிக்கு வியாபாரம் நடந்திருப்ப தாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி அளவுக்கு வியாபார இலக்கு எட்டப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தநிலையில், இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகாசியின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும், தமிழகத்தின் பெருமை. ஒவ்வொரு பட்டாசுக்குப் பின்னாலும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் கடின உழைப்பும், திறமையும், எதிர்காலக் கனவுகளும் அடங்கியுள்ளன.
முதல்-அமைச்சர் விஜயின் தலைமையில் செயல்படும் நமது அரசு, இந்த பாரம்பரியமிக்க தொழிலைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சிவகாசியை மேலும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்லவும் உறுதுணையாக இருக்கும்.
அடுத்த ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி விற்பனை என்ற மாபெரும் இலக்கை நோக்கிப் பயணிக்கும் இத்தொழிலுக்கு, அந்த மைல்கல்லை எட்ட தமிழக அரசு அனைத்து வகையிலும் முழு ஆதரவையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறோம் என அதில் பதிவிட்டுள்ளார்.