தமிழக செய்திகள்

கடமையின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீர வணக்கங்கள் - அண்ணாமலை

பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் காவல்துறையினரின் சேவையைப் போற்றுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

கடமையின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீர வணக்கங்கள் செலுத்துகிறேன் என 'வி த லீடர்ஸ்' கட்சி தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிரையும் துச்சமெனக் கருதிப் பணியாற்றும் காவல்துறையினரின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றும் காவலர் வீர வணக்க தினமான இன்று, கடமையின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு எனது வீர வணக்கங்களைச் செலுத்துகிறேன்.

மக்களின் பாதுகாப்பையும், சட்ட ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக சுயநலமின்றி, பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் காவல்துறையினரின் சேவையைப் போற்றுவோம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT