தமிழக செய்திகள்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தேர் திருவிழா- கவர்னர் வாழ்த்து

அய்யாவை நாடி வருகின்ற மக்களுக்கு மண், நீரால் நோய் பிணி எல்லாம் மாற்றினார்கள்.

சென்னை,

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப தியில் ஆண்டுதோறும் ஆவணி, தை, வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும் அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற ஜூன் 1-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

சாமிதோப்பில்

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தேர் திருவிழா"

பரம்பொருள் நாராயணம் கலியை அழிப்பதற்காக 1008 மாசி இருபதாம் தேதி திருச்செந்தூர் திருப்பாற்கடலில் அய்யா வைகுண்டராக அவதாரம் எடுத்து தெட்சணம் என்கின்ற சாமிதோப்பில் வந்திருந்து முதல் இரண்டு ஆண்டுகள் கலியுகம் மறைந்து தர்மயுகம் மலரவும் அடுத்து இரண்டு ஆண்டுகள் ஜாதி கொடுமை ஒழிப்பதற்காகவும் அடுத்து இரண்டு ஆண்டுகள் பெண் அடிமைத்தனம் மாற்றுவதற்காகவும் தவம் இருந்தார்கள்.

முத்திரி கிணறு

அப்பொழுது அய்யாவை நாடி வருகின்ற மக்களுக்கு மண், நீரால் நோய் பிணி எல்லாம் மாற்றினார்கள். எல்லா மக்களும் சமம் என்று சொல்வதற்காக எல்லோரும் ஒரே கிணற்றில் குளித்து, குடிப்பதற்காக முத்திரி கிணற்றினை உருவாக்கினார். இப்படி இந்த சமுதாயத்தில் இருந்த வேற்றுமைகளை எல்லாம் களைந்து அன்பு என்ற ஒரு குடைக்குள் வாழ்வதற்கு அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஆகமத்தை அரிகோபாலன் சீடர் மூலம் நமக்கு அருளினார்.

வைகுண்ட அவதாரம்

இப்படி மக்களுக்காக அவதாரம் எடுத்த நாராயண பரம்பொருள் தமது வைகுண்ட அவதாரத்தை நிறைவு செய்துவிட்டு 1026 ஆவது வருடம் வைகாசி மாதம் 21ஆம் தேதி திங்கள்கிழமை பகல் 12:00 மணிக்கு வைகுண்டம் ஏகினார். இதை நினைவு கூறும் பொருட்டு சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் நடைபெறும் வைகாசி தேர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது.