தமிழக செய்திகள்

கண் கலங்கி பேசிய சத்தியபாமா... ஆறுதல் கூறிய முதல்-அமைச்சர் விஜய்

ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுவதாக சத்தியபாமா கூறினார்.

திருப்பூர்,

தாராபுரத்தில் வருகிற 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று பிரசாரம் செய்தார்.

கண் கலங்கிய சத்தியபாமா

அப்போது, த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா பேசியதாவது;-

“அதிமுக இயக்கத்தின் தலைமை பிடிக்காமல் வெளியே வந்தேனே தவிர அந்த இயக்கம் பிடிக்காமல் வெளியே வரவில்லை. நாங்கள் துரோகி இல்லை. என் மீது பழி சுமத்துகின்றனர். ஒரு பெண் என்று பாராமல் அசிங்கமான வார்த்தைகளால் என்னை திட்டுவதால் நான் தற்போது மொபைலே பார்ப்பதில்லை. அவ்ளோ அசிங்கமா என்னை பேசுறீங்க. நான் அப்படி என்ன தவறு செய்தேன் அம்மாவினுடைய உண்மையான உணர்வு எனக்குள் இருந்தது.

அதிமுகவில் சேர்ந்தபோது அதிகம் பாதிக்கப்பட்டேன். அதிமுகவுடன் சேர்ந்து செயல்படுவது பிடிக்காமல் தான் வந்தேன். இன்று ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்காமல் பதவிக்கு வந்த தூய தலைவர் நமது முதல் அமைச்சர் விஜய். என் மீது தவறு இருந்தால் முதல் - அமைச்சர் மீண்டும் என்னை வேட்பாளராக நிறுத்திருப்பாரா? நானும் உங்களிடம் வந்து துணிச்சலாக ஓட்டு கேட்க முடியுமா? என் மீது சுமத்தப்படும் பழி பெண் என்றும் பாராமல் பேசும் ஆபாசமான வார்த்தைகள். என் மீது தவறு இருந்தால் நான் திரும்ப வந்துருக்க மாட்டேன்” எனறு கூறி சத்தியபாமா கண் கலங்கினார்.

சத்தியபாமாக்கு விஜய் ஆறுதல்

இதைக் கவனித்த முதல்-அமைச்சரும், தவெக தலைவருமான விஜய், சத்தியபாமாவை ஆறுதல் படுத்தினார். மேடையில் சத்தியபாமா உணர்ச்சிவசப்பட்டு அழுதபோது முதல்-அமைச்சர் விஜய் அவரை அரவணைத்து ஆறுதல் கூறிய நிகழ்வு தொடர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், பேசிய அவர், “எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்வதற்கு தானே வந்தேன் நான் வேறு எந்த நோக்கத்திலும் வரவில்லையே” என்று கூறயும் கண் கலங்கினார்.

SCROLL FOR NEXT