உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் 
தமிழக செய்திகள்

சத்தியபாமாவா..பெட்டி பாமாவா? உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் தவெக வாக்குறுதிகளை பட்டியலிட்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி

பேசியதாவது:-

கூட்டணிக் கட்சியினர் முதுகில் குத்தினர்

திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற சிலர் எதுவுமே சொல்லாமல் திருட்டுத்தனமாக சென்றுவிட்டார்கள்; கூட்டணிக் கட்சியினர் சிலர் மு.க.ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு சென்றனர். சிலர் முதுகில் குத்திவிட்டுச் சென்றனர். எல்லா கட்சித் தலைவர் வீட்டுக்கும் முதல்-அமைச்சரே சென்று சோபா டெலிவரி செய்தார்.

வாக்குக்கு பணம் அல்ல, எம்.எல்.ஏவையே தூக்குவதே தவெக பாணி.

சத்தியபாமாவா? 'பெட்டி பாமா'வா?

சத்தியபாமா என்ற பெயரை தற்போது 'பெட்டி பாமா' என்று மக்கள் மாற்றிவிட்டார்கள்; அதிமுகவில் இருந்து கிட்டத்தட்ட 7 எம்எல்ஏக்களை பெட்டி கொடுத்து தூக்கியுள்ளார் முதல்வர் விஜய் திமுக எம்எல்ஏக்களை பார்த்தால் வழக்கு, அதிமுக எம்எல்ஏக்களை பார்த்தால் பெட்டி காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றேன். அதற்கு முதல்-அமைச்சர் விஜய்க்கு கோபம் வந்துவிட்டது.

சபாநாயகர் ஆக்‌ஷன் சொன்னால் விஜய் நடிக்க தொடங்கி விடுகிறார். சட்டமன்றமா? ஷுட்டிங் ஸ்பாட்டா?

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ முதல் சபாநாயகர் வரை பாட்டுதான் பாடுகிறார்கள். சட்டமன்றத்துக்கு வந்திருக்கமோ? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கோமா? என்று தெரியவில்லை என்றேன்.முதல்-அமைச்சர் விஜ்யை வாயை திறந்து பேசியதாக சரித்திரமே இல்லை. மவுனமாகவே இருப்பார்.

சட்டமன்றம் பிக் பாஸ் போல் ஆகிவிட்டது. ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப முதல்-அமைச்சர் விஜய் பேசி வருகிறார்.எம்.எல்.ஏக்கள் கார் வேண்டும் என்றார்கள். ஒரு எம்.எல்.ஏ காதல் தோல்வி பற்றி பேசுகிறார்.

எங்கு பார்த்தாலும் கரண்ட் கட்

முதல்-அமைச்சர் தொகுதி, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி என எங்கு பார்த்தாலும் கரண்ட் கட். தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை; ரெண்டே ரெண்டு பேருக்குதான் போட்டி, ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு. வாக்குறுதிகளை நிறைவேற்றதாக தவெக அரசு. கடந்த தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்துவிடாதீர்கள். ஆளுங்கட்சிக்கு உரிய பாடம் புகட்டுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT