சாத்தூர்,
விருதுநகரில் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின.
இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டனர். இதன்பின்னர், அவர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட 4 வெடிவிபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர்.