தமிழக செய்திகள்

'இன்னுயிர் காப்போம் திட்டம்': முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

இன்னுயிர் காப்போம்’ என்ற புதிய மருத்துவ உதவி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் .

சென்னை,

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க இன்னுயிர் காப்போம் என்ற புதிய மருத்துவ உதவி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் .

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் 'இன்னுயிர் காப்போம்' திட்டத்தை அவர் இன்று தொடங்கி வைக்கிறார்.

சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்பதே இன்னுயிர் காப்போம் திட்டம் ஆகும். தமிழகம் முழுவதும் 610 மருத்துவமனைகளில் இந்த திட்டம் செய்லபடுத்தப்பட உள்ளது.

விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாடு, எந்த மாநிலம், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து சிகிச்சை கட்டணத்தில் ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT