தமிழக செய்திகள்

ஜூன் 1-ந்தேதி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

தற்போது வரை 3.50 கோடி பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 4 கோடியே 10 லட்சம் புத்தகங்கள் வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது வரை 3 கோடியே 50 லட்சத்து 51 ஆயிரத்து 40 பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, புத்தகங்களை அச்சிடுவதற்கு கொடுக்கப்பட்ட ஆர்டரில் 88.06 சதவீத பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள புத்தகங்கள் விரைவில் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1-ந்தேதி புதிய கல்வி ஆண்டு தொடங்குகிறது. அப்போது பள்ளிகள் திறந்ததும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

SCROLL FOR NEXT