தமிழக செய்திகள்

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

ஆசைவார்த்தை கூறி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

வில்லியனுர் அருகே உள்ள ஜி.என்.பாளையம் எழில் நகரை சேர்ந்தவர் வருண் ( வயது 20). தாகூர் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வருகிறார். இவருக்கும், பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த மாணவியை ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று வருண் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை புதுச்சேரி பிரபல ஜவுளிக்கடை பின்புறம் விட்டு விட்டு சென்றார். உடல் சோர்வாக இருந்ததால் அந்த மாணவி மயங்கிய நிலையில் இருந்தார்.

இதைக்கண்ட பொதுமக்கள் அந்த மாணவியை மீட்டு ஒதியஞ்சாலை போலீசில் ஒப்படைத்தனர். அப்போது மாணவியிடம் விசாரணை செய்தபோது அவர் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசார் குழந்தைகள் நலக்குழுவிடம் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வில்லியனூர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வருணை கைது செய்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு