சதுரங்கப் போட்டியில் சிறப்புமிக்க “நோபல் உலக சாதனை” படைத்த பள்ளி மாணவன் பாரத் குமாருக்கு, நோபல் உலக சாதனை அமைப்பின் சார்பில் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் அந்த சாதனை மாணவனை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் அவர், பாரத்குமாரின் திறமை மற்றும் விடாமுயற்சி பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டார். மேலும் அவரது இந்த சாதனை, மாவட்டத்தின் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகவும், உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்லும் ஊக்கமாகவும் அமையும் எனவும், மேலும் இளம் வயதிலேயே உலக சாதனை படைத்திருப்பது பெருமைக்குரியது என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அடைய தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சர்வதேச சதுரங்க பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் சக்கரவர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.