உப்பு உற்பத்தி 
தமிழக செய்திகள்

கடும் வெயில் எதிரொலி: தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிரமடையும் உப்பு உற்பத்தி - உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

உப்பு உற்பத்தி அதிகரிப்பால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

தூத்துக்குடி,

முத்துநகர் என அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில், மீன்பிடித்தலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி மிக முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கடும் வெயில்

கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெயில் பதிவாகி வந்தது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் குறையாமல், கோடைக்காலத்தைப் போல் வெயில் வறுத்தெடுத்தது. இந்த அதீத வெப்பமான சூழல், உப்பு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பாக அமைந்தது."

உற்பத்தி அதிகரிப்பு

வழக்கமாக மழைக்காலங்களில் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு நீடித்த வெப்பமான வானிலை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் வேகமாக ஆவியாகி, உப்பு படிவங்கள் தடிமனாக மாறின. இதனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி உப்பு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.

விலை வீழ்ச்சி

ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மாவட்டம் முழுவதும் உப்பு உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்ததால், சந்தைக்கு உப்பின் வரத்து பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

SCROLL FOR NEXT