சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகிற 24-ந்தேதி மாமன் னர் மருதுபாண்டியரின் நினைவு தின நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற உள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி காளையார்கோவிலில் சமுதாய மக்கள் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து வருகிற 30-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை விழா நடை பெற உள்ளது. இதில் பங்கேற்ற தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள்.
இதை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை பாதுகாப் பதற்காக சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 20 முதல் 30-ந்தேதி வரை பி.என்.எஸ்.எஸ். தடைச்சட்டம் 163 (1) கீழ் (பழைய சட்டப்படி 144) தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவிட்டார்.