தமிழக செய்திகள்

மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் முழுவதும் வரலாறு காணாத வகையில் சுமார் 7,000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் திருப்பரங்குன்றம் கோயில், மலையைச் சுற்றிலும் 4 டிஐஜிகள், 7 எஸ்பிக்கள், 10 கூடுதல் எஸ்பிக்கள், 45 டிஎஸ்பிக்கள், 100-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் என 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்

போராட்டம் நடத்த தடை

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் உள்பட மதுரை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 9 ம்ணி முதல் நாளை மறுநாள் காலை 10 மணி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: மதுரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கில் பாதிப்பு ஏற்படலாம் என்று வருவாய்த்துறை அறிக்கை அளித்துள்ளது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு

வருவாய்துறை, காவல்துறை அறிக்கையின் அடிப்படையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், திருமணம், இறுதிசடங்கு ஆகியவற்றிற்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்னா பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT