சிவகங்கை,
மருதுபாண்டியர்கள் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில், கலெக்டர் ஆகாஷ் 20-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் வரும் 27-ம் தேதி மருதுபாண்டியர் நினைவு தினமும், ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி தேவர் குருபூஜையும் நடைபெற உள்ளன.
இதனை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில், வரும் 20-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் BNSS சட்டப்பிரிவு 163-ன் கீழ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.