தமிழக செய்திகள்

சீமான் - கயல்விழி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.!

சீமான் - கயல்விழி தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில், சீமான் - கயல்விழி தம்பதிக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவது முறையாக தந்தையான சீமானுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் நாதக தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை சீமானுக்கு தெரிவித்து வருகின்றனர்.