தமிழக செய்திகள்

சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல்

சவுடு மணல் அள்ளிய 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மானாமதுரை, 

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பகுதிகளில் அனுமதி இன்றி சவுடு மணல் அள்ளுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தெ.புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி சவுடு மண் அள்ளிய 4 லாரிகள், பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SCROLL FOR NEXT