தமிழக செய்திகள்

அழகுத்தாய் அம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு

அழகுத்தாய் அம்மன் கோவிலில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்- மூங்கில்பாடி சாலையில் அழகுத்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சுமார் 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது.

இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வந்த பூசாரி, வேப்பமரத்தில் இருந்து வெண்மை நிறத்தில் திரவம் சொட்டு வதை பார்த்தார். மேலும், மரத்தில் சுமார் 2 அடி அகலத்துக்கு பால் வழிந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அப்பகுதியில் பரவியதும், பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர். தொடர்ந்து, மரத்தில் புடவை சுற்றி, பூ மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமம் வைத்து வழிபட்டனர். வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT