கோவை,
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட கோட்டை மேடு பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேட்டியின் போது பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி:-
கோவை தெற்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டத்தில், மகத்தான வெற்றியை மக்கள் வழங்கி உள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றோம். வரும் காலத்தில் 10 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கோவையில் உள்ள 10 தொகுதிகளில், 3 தொகுதிகளை மக்கள் திமுகவிற்கு வழங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி ஒரு வாரம், சமூக வலைதளங்களில் பகிரும் கருத்துகள் என்பதை அனைவரும் பார்க்கிறோம்.
குதிரை பேரம் குறித்த கேள்விக்கு? அதிமுக கட்சி 2 ஆக பிரிந்து உள்ளது. ஒரு பிரிவினர் ஆளும் அரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். எங்கள் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குறுதிகளை பட்டியலிட்டு கூறியிருந்தார் அதை அவர்கள் எவ்வாறு நிறைவேற்ற உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, என்னிடம் அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. கையெழுத்து போடும் இடத்தில் எதார்த்தமாக சந்தித்து பேசியது தான். அரசியல் தொடர்பாக அவர்களிடம் பேச அவசியம் இல்லை என கூறினார்.
திமுக ஆட்சியில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அதிமுக ஆட்சி காலங்களிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. புதிய அரசு வந்தவுடன் தான் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது போன்று செய்திகள் வெளியாகி வருகிறது. கடந்த காலங்களையும், இப்போது உள்ளதையும் பார்த்து செய்திகள் வெளியிட வேண்டும். தவெக ஆட்சியில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றது. ஊடகங்கள் உள்ளதை உள்ளபடி செய்திகள் வெளியிட வேண்டும். ரீல் ஆட்சியாக இல்லாமல், ரியல் ஆட்சியாக இருக்க வேண்டும்.
என்ன மாற்றம் கொண்டு வர போறீங்க? திமுக ஆட்சி செய்தபோது, தமிழ்நாடு பலவேறு துறைகளில் இந்தியாவிலே முதல் இடத்தில் உள்ளது. இதில், மாற்றம் குறித்து ஆளும் கட்சி எதையும் சொல்லவில்லை. எந்த மாதரியான மாற்றம் கொண்டு வர உள்ளனர்?
தமிழ்நாடு வளர்ச்சி பெற்ற மாநிலமாக திமுக மாற்றியுள்ளது. இதை அவர்கள் தக்க வைத்தாலே போதுமானது. தமிழ்நாட்டை பின்னோக்கி எடுத்து செல்லாமல் இருந்தாலே போதும். விரைவில் ஆட்சி கவிழும் என்பது, எதுவாக இருந்தாலும் பொறுத்து இருந்துப்பார்போம் என்று பேசினார். இந்த நிகழ்வின்போது, மாவட்ட துணைச்செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா, மாவட்ட பொருளாளர் எஸ்.எம். முருகன் மற்றும் பகுதிக்கழக செயலாளர்கள், வட்டக்கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.