தமிழக செய்திகள்

குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜி முன்ஜாமின் கேட்டு மனு: இன்று விசாரணை

குதிரைபேர விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கும், தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய திருநாவுக்கரசு உள்பட 8 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த குதிரைபேர விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும், அவரது தம்பி அசோக்குமாருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இருவருக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர்.

இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT