தமிழக செய்திகள்

சமூக நீதிக்கு பின்னடைவு - கனிமொழி எம்.பி. பதிவு

திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளை தவெக அரசு உறுதியாக தொடர வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

மதம் மாறிய மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இஸ்லாம் சமயத்தைத் தழுவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு உரிமையைப் பெற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது, சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

சாதிய ஒடுக்குமுறைகளால் ஏற்பட்ட பிற்படுத்தப்பட்டத் தன்மையை அளவிட மதத்தை தேர்வு செய்யும் உரிமை ஒரு நிபந்தனையாக இருக்க கூடாது. தவெக அரசு இந்த விவகாரத்தில் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளை உறுதியாக தொடர வேண்டும். மதம் மாறிய மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT