கோடை சீசன் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.குணா குகை, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால், காலையிலேயே சுற்றுலா பயணிகள் காத்திருந்து நுழைவுச்சீட்டு பெற்று செல்கின்றனர். கோடை விடுமுறை இன்னும் ஒருவாரத்தில் முடிவடைய உள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக சுற்றுலாப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கியுள்ளனர்.
இதனால், மலைச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மலைச்சாலைகளில் ஆமை வேகத்தில் செல்லும் சுற்றுலா வாகனங்களால் பிரதான பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.