சென்னை,
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 மற்றும் 13- க்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.
சென்னை குடிநீர் வாரியம் தகவல்
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) சார்பில், அடையாறு மண்டலம், தரமணி சரிவு (Ramp Metro Station) மெட்ரோ ரெயில் நிலையத்தில் பிரதான கழிவுநீர் உந்துக்குழாய் மாற்றி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், 16.07.2026 அன்று இரவு 10 மணி முதல் 17.07.2026 இரவு 10 மணி வரை மண்டலம் -9 (தேனாம்பேட்டை) –க்குட்பட்ட வடக்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், தெற்கு மயிலாப்பூர் கழிவுநீர் உந்து நிலையம், ஐஸ் ஹவுஸ் கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் மண்டலம் - 13 (அடையாறு) - க்குட்பட்ட பட்டினப்பாக்கம் கழிவுநீர் உந்து நிலையம், ராஜா அண்ணாமலை புரம் கழிவுநீர் உந்து நிலையம், பக்தவச்சலம் நகர் கழிவுநீர் உந்து நிலையம். அடையாறு கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, தேனாம்பேட்டை மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட கீழ்கண்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு கீழ்க்காணும் பகுதி அலுவலர்களை தொடர்பு கொள்ளவும்.
1. மண்டலம் - 9 (தேனாம்பேட்டை)
கைபேசி எண்
8144930909
பகுதிகள்
ஐஸ்ஹவுஸ், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலை, ஆழ்வார்பேட்டை, சாமியர்ஸ் சாலை, ஆஸ்டின் நகர், மந்தைவெளி, சீத்தம்மாள் காலனி மற்றும் இராயப்பேட்டை
2. மண்டலம் - 13 (அடையாறு)
கைபேசி எண்
8144930913
பகுதிகள்
பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம், ராஜா அண்ணாமலை புரம் அடையாறு, கஸ்தூரிபாய் நகர் காந்தி நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், பரமேஸ்வரி நகர், பத்மநாபன் நகர், அருணாச்சலபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், ஜீவரத்தினம் நகர், லட்சுமிபுரம், பெசன்ட் நகர், ஓடை குப்பம், உரூர் குப்பம், காமராஜர் நகர், பாலகிருஷ்ணன் நகர், திருவள்ளுவர் நகர், பத்திரிகையாளர் குடியிருப்பு, பி.டி.சி காலனி மற்றும் திருவான்மியூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.