தமிழக செய்திகள்

த.வெ.க வேட்பாளர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு

பிரகாசம் மீது திருவள்ளூர் நகர போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

நடிகர் விஜயின் தவெக கட்சியின் பூந்தமல்லி வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தெற்கு மாவட்டச்செயலாளராக இருப்பவர் தான் பிரகாசம் , இவர் 6 மாதத்திற்கு முன்னர் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட போது தவெக பெண் நிவாகியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கட்சித் தலைமையிடம் 6 மாதங்களுக்கு முன்பே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பெண் கூறியிருக்கிறார். இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அந்த பெண் தனது கணவருடன் சேர்ந்து பாலியல் சீண்டல் புகார் அளித்திருக்கிறார். இதனையடுத்து பிரகாசம் மீது திருவள்ளூர் நகர போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தவெக பெண் நிர்வாகிக்கு பதவி கொடுக்காமல் விட்டதால் தன் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளதாக பிரகாசம் மனைவியும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.