தமிழக செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை, 

பாலியல் தொல்லை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள் 14 வயது சிறுமி. சம்பவத்தன்று இவள் தனது வீட்டு முன்பு கோலம் போடுவதற்காக வாசல் பெருக்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த ராஜாக்கண்ணு மகன் முருகன் (வயது 48) என்பவர் வீட்டின் முன்பு நின்று வாசலை பெருக்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டாள்.

இதைகேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டு, முருகனை மடக்கி பிடித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொழிலாளி கைது

மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான முருகன் கூலி த்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து