தமிழக செய்திகள்

சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடுத்த காஞ்சீபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

சென்னை,

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:

சென்னை அடுத்த காஞ்சீபுரம் அருகே உள்ள ஐயம்பேட்டை, அன்னை சத்யாநகரை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவர் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை காஞ்சீபுரம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் அரசு வக்கீல் கண்ணன் ஆகியோர் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை கோர்ட்டில் ஆதாரங்களுடன் நிரூபித்தனர்.

20 ஆண்டுகள் சிறை:

வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு நீதிபதி தீப்தி அறிவுநிதி, குற்றம் சாட்டப்பட்ட முரளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் காஞ்சீபுரம் கோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.